20 GOOD MANNERS FOR ADULT/KIDS/BUSINESS

20 Tips -எப்படி நடந்துகொள்வது ?

நெறய அரவேக்காடுகள் வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்கும் , நம்ம அந்த அரவேக்காடுல வந்துர கூடாது.

எல்லாருக்கும் இந்த விஷயம் Basic-ஆ தெரிஞ்சிருக்கனும்.

20 Point பாப்போம்….

1) யாருக்காவது ஒரு தடவ Call பண்ணீங்க, அப்படின்னா திரும்ப Call பண்ணாதீங்க.


சரி miss ஆயிட்டு / தப்பாயிட்டுன்னா கூட ஒரு Call, கொஞ்சம் டைம் விட்டு ஒரு Call பண்ணுங்க…

      - இந்த  2 Call-க்கும்  reply பண்ணலைன்னா, மானங்கெட்ட பொழப்பு மாதிரி திரும்ப திரும்ப கால் பண்ணாதீங்க..
      -அவன் நம்மள மனுஷனா கூட மதிக்கல, அவனுக்கு ஓயாம நான் 50 Call பண்ணன் தெரியுமா???

70 missed call இருந்திச்சி தெரியுமா…? இப்படின்னு பண்ணுனா நம்ம முட்டாத்தனத்த காட்றோம்.

So, எந்த காரணத்த கொண்டும் 1 தடவ , 2 தடவைக்கு மேல யாருக்கும் Call பண்ணாதீங்க… Call வர்ற வரைக்கும் wait பண்ணுங்க, அப்பறம் message அனுப்பறது வைக்கிறது follow-up கத வேற நான் General-ஆ பேசிக்கிட்டுருக்கேன்.

2) யார்கிட்டயாவது எதாவது பொருள் வாங்கனீங்கன்னா அத உடனே குடுத்திருங்க ,

நம்ம இத நெறய வீடியோல பேசிருக்கோம்.

Special-லா வந்து கடன் எதும் வாங்கனீங்கன்னா குடுத்திருங்க.

கடன் அன்பை முறிக்கும்னு சும்மாவா சொல்லிருக்கான்.

ஏன்னா வாங்கிட்டு, “போடா” அப்படின்னு ,
Boss என்கிற பாஸ்கரன் படத்துல “எவ்வளவு அலைய வேண்டியிருக்கு மாப்ள பணம் வாங்கறதுக்கு”, “அதெல்லாம் கவலபடாத வாங்கனதுக்கு அப்பறம் அவன் அலைவாம்ல” அப்படின்னு விட்ருவாங்க இல்லையா… So அந்த மாதிரி ஒரு ஆளா இருக்காதிங்க , வெறும் கடன் / பணம் மட்டுமில்ல , ஒரு குடை /Pen/ ஒரு டிபன் box வாங்கனாலும் சரி, ஒரு வீட்ல ஒரு சுத்தியல் / Screw-driver வாங்கிட்டு வந்திங்கன்னா உடனே கொண்டு போய் குடுங்க.

மக்கள் பயங்கர சுயநலவாதிகள் , தனக்கு மட்டும் என்ன வேணும்னு பாப்பான் , செய்வான் அந்த ஆள தூக்கி குப்பைல போட்ருவான், எவன் நாசமா போனா என்ன, அவன் அன்னைக்கி குடுத்து உதவுனான் இன்னக்கி எப்படியோ போய்ட்டு போறான் அப்படின்னு போயிருவாங்க..

உங்கள பத்தி மோசமான , ஒரு நாறன பையன் / மோசமானவன் இவன் அப்படின்னு அந்த லிஸ்ட்ல வச்சிருவாங்க…

எங்கயாவது ஹோட்டல் போனிங்கன்னா, Expensive-ஆன Food ஆர்டர் பண்ணாதீங்க,


  1. அதும் Special-ஆ ஒருத்தர் party-க்கு கூட்டிட்டு போயிருக்காரு… அவன்கிட்ட போய் இன்னக்கி இவன காலி பண்ணாம விடக்கூடாதுனு சொல்லி இருக்கிறதலயே பெரிய List என்னதுனு சொல்லி வாங்ககூடாது.

கொஞ்சம் ஜாடமாடயா கேட்டுக்கிடணும், அவங்க என்ன ஆர்டர் பன்றாங்க, இவங்க என்ன ஆர்டர் பன்றாங்கனு..

சில லூசுப்பயலுவ இருக்கானுங்க.. எல்லாரும் சாதாரணமா சாப்பிடுவோம்னு நெனப்பான் , அவன் மட்டும் இருக்கிறதுலயே வித்தியாசமானதும் அல்லது ரொம்ப Costly-ஆன பொருள ஆர்டர் பண்ணி எல்லாரையும் ஒரு மாதிரி embarase பண்ணி விட்ருவான்.

அடப்பாவி இப்படி பண்ணி விட்டுட்டு போய்ட்டானே அப்படின்னு
( My reliance company – wet party experience)

  1. என்ன மாதிரி Question கேக்கறது?

மோசமான Question கேக்காதீங்க ,

யாரையாவது பாத்து அப்பறம் Family-ல யாரெல்லாம் இருக்கா அப்படின்னு கேளுங்க..

அம்மா , அப்பா ,நான் , தம்பியெல்லாம் இருக்கோம் அப்படின்னு சொன்னாங்கன்னா கல்யாணம் முடியலன்னு அர்த்தம்.

நான் , என் கொழந்த 2 பேரும் இருக்கோம் அப்படின்னா எதோ தகராறு Husband கூட அப்படின்னு அர்த்தம்.

நானும் என் Husband மட்டும்தான் இருக்கோம் அப்படின்னா.. குழந்தைங்க இல்லனு அர்த்தம்..

இத decent-ஆ புரிஞ்சிக்கிடனும்,

அத விட்டுட்டு, நான் எங்கப்பா நாங்க 3 பேர்தான், உங்களுக்கு “இன்னும் கல்யாணம் முடியலையா?” அப்படின்னு அரவேக்காடு மாதிரி கேக்க கூடாது…

நாங்க 2 பேர்தான் இருக்கோம் நானும் என் Husband-ம் , “கொழந்த கிடையாதா அப்போ ? “

அரவேக்காடு அரவேக்காடுன்னு எதுக்கு சொல்றம் தெரியுமா???

நீங்கல்லாம் சுடுகாடு போயிருக்கிங்களானு தெரியல, அங்க மனுஷன வச்சி எரிச்சிட்டானா , எரிச்சதுக்கு அப்பறம் பாதில எந்திரிச்சி டுபுக்குனு நிக்கும் அது. திரும்ப மட்டையால அடிச்சி போடு, அந்த எலும்பெல்லாம் அடிச்சி ஒடச்சி எரிப்பாங்க ..

நான் அசிங்கமா பேசறேன்னு நெனைக்காதிங்க , ஆனா நம்மகிட்ட நெறய பேரு அவன் அரவேக்காடா இருந்து நம்மள எல்லார்த்தையும் சாகடிச்சிட்டு இருப்பான்.

யார்கிட்ட எப்படி பேசணும் , என்ன பேசணும் , மனம் கோணாம எப்படி பேசணும்னு தெரியாம, அவன் பாதி செத்த பொணமா நம்மள பொணமாக்கிட்டு இருப்பான்.

இத தாங்க முடியாத நெறய பேரு, அவன் பொணமா அலைவாங்க, இப்படி கேட்டுட்டானே , இப்படி கேட்டுட்டானே , இப்படி பேசிட்டானே ஊரு உலகத்துல சொல்றாங்களே அப்படின்னு அந்த அரவேக்காடு கூட இந்த அரவேக்காடும் சேந்துக்கிடும்.

போடா அப்படின்னு சொல்லிட்டு வேலைய பாக்கறது இல்ல..

அல்லது இந்த மாதிரி கேன பயலுவ கூட்டத்துல எல்லாம் இருக்காதிங்க ,

இந்த மாதிரி லூசு பிடிச்ச கூட்டதெல்லாம் ம்.. ம் ..னு கேட்டுட்டு போயிருங்க…

அல்லது உங்கள இரும்பு மனுஷனா / இரும்பு மனுஷியா மாத்திக்கங்க, இவங்களால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராம பாத்துக்கங்க…

Special-ஆ போயிட்டு கல்யாணம் ஆயிடுச்சா , இது வாடக வீடா / சொந்த வீடா அப்படினு கேக்கறது.
அத கேக்காதீங்க, “ஓ!!! துட்டு இல்லாத பையலா நீ”, “தெருவுலதான் நிக்கியா” அப்படின்னு அர்த்தம்.

அதுவும் காணாதுனு இன்னும் Car இல்ல உன்கிட்ட , பைக்லதான் போறீங்களா? என்ன இருக்கு உங்ககிட்ட Vehicle? , கேக்காதீங்க..

அவரு பாவம் கார் வாங்க முடியாம, அதே `மாதிரி சில பணக்காரங்ககிட்ட போயிட்டு, அவங்க கஷ்டப்படுவாங்க , அங்க போயிட்டு உங்க பணக்காரத்தனத்த பேசாதீங்க..

கொழந்த இல்லாதவங்ககிட்ட போயி, என் கொழந்த இப்படி / அப்படி பண்ணும்னு பேசாதீங்க..

செலவங்க கல்யாணம் முடியாம இருப்பாங்க.. அவங்ககிட்ட போயிட்டு, என் Husband இப்படி , என்னைய அப்படி பாத்துக்கிடுவாரு , நாங்க 2 பேரும் இப்படி / அப்படி அப்படினு இந்த கதைய விடாதீங்க.

இது சாதாரணமா தெரியும் ஆனா சில அரவேக்காடுகளுக்கு இது கூட தெரியாது, என்ன பேசணும் , எப்படி பேசணும் , அவங்க Background என்ன அப்படின்னு தெரியாது.

சிலவங்க Divorce ஆகியிருப்பாங்க , புருஷன விட்டு தனியா இருப்பாங்க அவங்ககிட்டலாம் போயிட்டு உங்க Romance கதையும், உங்களோட பிரச்னையும் பத்தி பேசாதீங்க, கண்டிப்பா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க

  1. எங்காயாவது / யார்கிட்டயும் பேசும்போது (Cooling Glass) கண்ணாடியெல்லாம் போட்டுட்டு பேசக்கூடாது.

கண்ணாடி போட்டுட்டு பேசனோம் அப்படின்னா நம்ம கண்ணு அவங்களுக்கு தெரியாது, அவங்கல்லாம் இந்த Actor, லட்ச லட்சமா சமபாதிக்கிறான் தெரியுமா அவன் திமிருத்தனத்துல அவன பத்தி காட்றதுக்கு, அவ்வளவு Style-ஆ காட்றதுக்கு பேசுவான்

இன்னொருத்தன் வந்து அவன் பேசும்போது அவன் கண்ணு எங்க போகுது அப்படினு தெரிய கூடாதுனு பேசுவான்.

ஒருத்தர்கிட்ட பேசும்போது Cooling Glass கண்ணாடி , கருப்பு கண்ணாடி போட்டு பேசறது அநாகரிகம், அடாவடித்தனம், திமிருத்தனம்.

So அந்த மாதிரி கண்ணாடி போட்டுட்டு யார் கூடயும் பேச கூடாது, டப்புனு கண்ணாடிய களத்தனும் சரியா…

  1. அதே மாதிரி நீங்க எங்கையாவது நீங்க Hotel போறீங்க, Door இருக்கு கதவ தெறந்து விடனும், கதவ மூடனும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்போது, எதுத்தால உள்ளவங்க வந்தாங்கன்னா , யாரா இருக்கட்டும் அவங்க , Public-ல யாரா இருக்கட்டும், நீங்க கதவ தெறந்து விட்டிங்கன்னா நேரா அவங்க மூஞ்சில போய் அடிக்கும். சில அறிவு கெட்ட ஜென்மங்கள் இப்படி பண்ணும்

தெறந்திட்டு பின்னாடி ஆள் வருதான்னு பாக்கணும், யாரும் இல்லன்னா விடணும், யாரும் வந்தாங்க அப்படின்னா பிடிச்சி வச்சிக்கிடனும், அவங்க வரும்போது Thank You சொல்லுவாங்க..

என் Company ஓட COO மக்கரன் சார் அவர் எப்பவும், எங்க கம்பெனிக்கே Head அவரு, அவரு எப்பமாவது கதவ தெறந்துட்டு போனார்னா பின்னாடி ஆட்கள் வந்தா , அங்கயே நின்னுட்டு கதவ பிடிச்சி நின்னிட்டுருப்பாரு, வர்ற ஆட்கள் எல்லாம் போற வரைக்கும்.

ஒரு COO, கதவ பிடிச்சி வச்சிருப்பாரு எல்லாரும் போவாங்க , எல்லாரும் நெளிஞ்சி, கிழிஞ்சி nervous ஆயிரும் என்ன இப்படி இருக்காரு அப்படின்னு

அவரு கதவ தெறந்திட்டு நின்னிருப்பாரு, நாங்க எல்லாரும் போய்ட்ருக்கோம் அப்படி , watchman மாதிரி.

சார்! சார்!! Thank You, Thank You-னு சொல்லிட்டு போவோம், அப்பறம் எல்லாரும் போனதுக்கு அப்பறமா அவரு போவாரு

இத தெரிஞ்சி நெறய பேரு உள்ளயே நின்னிக்கிடுவான் ஏ அவரு கதவ பிடிச்சிக்கிட்டுருக்காரு வெளிய போறதுக்கு அப்படின்னு

7. ஒவ்வொரு எடத்துலயும் சரி , Lift-லயும் சரி , Lift-ல உள்ள போயிட்டிங்க 2 பேர் வரங்கண்ணா டக்குனு Stop பண்ணி வைங்க, ஒரு கைய வச்சி வைங்க யாரா இருக்கட்டுமே, நாசமா போறான் அவன் பெறவு வரட்டும் விடு அப்படி விடக்கூடாது அந்த மாதிரி ஒரு விஷயம்

Lift உள்ளயும் ஒரு Manners இருக்கு, எப்படி நிக்கணும் அப்படின்னு. Lift உள்ள போன உடனே எல்லாருமே கதவ நோக்கி நிக்கனும், அதுதான் manner.

எல்லாரும் என்ன பண்ணுவாங்க, நேரா போய் எதித்தாலே அவன் இப்படி நிப்பான் அவன் மூஞ்சிக்கு நேரா நிக்கிறது , அதுவும் Special-ஆ பொண்ணு நின்னிட்டுருந்தா அந்த பொண்ணு மூஞ்ச பாத்து நிக்கிறது, அப்படியெல்லாம் நிக்க கூடாது.

Lift உள்ள போன உடனே எல்லாருமே திரும்பி நேரா கதவ நோக்கி நிக்கனும் இதுதான் Lift-ல உள்ள Manners.

  1. அதே மாதிரி Ladies யாரும் வந்து உக்காந்தாங்கன்னா Chair இழுத்துவிட்டு, அவங்கள உக்கார வைக்கிறது.
    இது ஒரு நல்ல Gentleman-க்கு அழகு. அதும் General-ஆ வயசானவங்க இருந்தாங்கன்னா அவங்கள உக்கார வைக்கிறது.

நீங்க பெரிய பெரிய Restaurant-லாம் போனீங்கன்னா waiter-லாம் அந்த Chief-லாம் எல்லாரும் போயி Chair-ல உக்காரும்போது , Chair-அ பின்னாடி இழுத்து அவங்கள உள்ள போனதுக்கு அப்பறம் உள்ள தள்ளி உக்கார வைப்பாங்க

ஏன்னா பெரிய பெரிய Hotel-ல எல்லாம் Weight-ஆன Chair-ஆ இருக்கும், நம்ம டீ கடைல இருக்கிற Chair மாதிரி இருக்காது. அதனால அப்படியெல்லாம் Help பண்ணுவாங்க.

So, நம்ம அப்படி பண்ணலாம், ஒரு Decent-ஆ இருக்கிறதுக்காக, வளருவோம் நம்ம வந்து எப்போமே இந்த மாதிரி பழக்கங்கள்லாம் வளரும்போது நம்ம வளர்ச்சி கூடும்.

  1. எங்கயாவது உங்க Friend ஒருதடவ pay பன்னாங்கண்ணா, நீங்க ஒரு தடவ pay பண்ணுங்க.

ஒருத்தன் கங்கணம் கட்டிட்டு அலைவான் பைசா எப்போமே வெளிய எடுக்கவே மாட்டான்.
அவன் உங்க குரூப்ல ஒருத்தன் இருப்பான், எல்லா எடத்துலயும் திங்கிறதுக்கு வருவான், அவன் ஒரு நாளைக்கி திங்கிறதுக்கு கூப்பிட மாட்டான் அந்த மாதிரி, அப்படின்னா நீங்க போகாதீங்க நீங்க.

என்னையெல்லாம் என் பழைய Friends-லாம் கூட கூட்டு போனா , நெறய பேருக்கு தெரியாது, நான் எப்பமாவது பார்ட்டில கூட நான் Drinks பண்ணுவேன்னு தெரியாது.

நான் எவனுக்குமே சொல்ல மாட்டன், ஒன்னு நமக்கு புடிக்காது, உடனே தெனமும் சாயங்காலம் சாயங்காலம் எங்கயாவது உக்காறதுக்கு கூட்டி போயிருவான், அல்லது அது பார்ட்டி, இது பார்ட்டிம்பான்,

சுரேஷா அவன் குடிக்க மாட்டாம்பா அப்படின்னு சொல்லிட்டு நம்மள லிஸ்ட்ல வச்சிருப்பான், கூட்டத்துல இருந்து வெளிய வந்துருவன், நமக்கு புடிக்காது.

வீட்ல ஒரு 500 ரூபாய்க்கு கொடுத்தா நல்ல சமையல் பண்ணி நம்ம குழந்தைங்க Family, அம்மா அப்பா எல்லாரும் நல்லா சாப்பிடலாம்.

அத விட்டுட்டு எங்கயாவது Bar-ல போய் உக்காந்து தண்ணி அடிச்சா 500 அப்படி தூக்கி குடுத்துட்டு வருவான், வெளிய பிச்சை எடுப்பான், அங்க 500 ரூபா குடுப்பான் .

So , எப்படி நீங்க செலவழிக்கணும், ஒருத்தன் செலவழிச்சா நீங்களும் செலவழிக்கணும் ஒகே.
இல்லன்னா அந்த மாதிரி கூட்டத்துக்கே போவாதிங்க, வெறும் ஓசில திங்கிற கூட்டம்னு அலையாதீங்க..

இப்ப நெறய பேரு நான் அந்த மதத்த சொல்ல விரும்பல… அந்த ஆளுங்களாம் எங்க போனாலும் சரி ஓசில திங்க அலைவாங்க.. அது பழக்கமே ஆயிரும், எனக்கு சோறு போடறதுதான்டா உங்க வேல
அதுலயும் Best சோறா போடணும் , மட்டன் பீசா போடணும், சிக்கன்ல Leg பீசா போடணும் அந்த மாதிரி, ஒகே இது ஒண்ணு

10. யார் யாருக்கு பிடிச்சது , பிடிக்காதது இருக்கும் அத அப்படியே வச்சுக்கங்க .

For Example, ஒருத்தர் வந்து மோடிய பத்தி ரொம்ப பிடிக்கும் , ரொம்ப பாசமா இருப்பாரு, மோடின்னா உயிரா இருப்பாரு

இன்னொருத்தங்க அவர கங்கணம் கட்டி அலைவான் , எப்படிடா இந்தியால உள்ள அவ்வளவு பயலும் முட்டா பயலா இருக்கானுங்க இவருக்கு ஓட்ட போட்டானுவ, காணாததுக்கு ரெண்டாவது தடவையும் ஓட்ட போட்டாங்க. சரி ஓட்ட போட்டாலும், அவரு ஏமாத்தி வந்துட்டாரு , E-Way Machine-ல எல்லாம் ஏமாத்திட்டாங்க அப்படின்னு நம்ம பாப்போம்.

நம்ம ஒரு 10 பேரு நல்லவங்களா , புத்திசாலிங்க, Intelligent , ஆனா இந்தியால உள்ள அவ்வளவு பேரும் முட்டாப்பயலுவ..
உலகத்துல உள்ள அவ்வளவு பேரும் முட்டா பயலுவ அப்படின்னு நம்ம ஒரு நெனப்புல இருப்போம்
ஆனா நம்ம அந்த 10 பேர்ல இருப்பமா, 90 பேர்ல இருப்பமா தெரியாது , எது சரி எது தப்புனு தெரியாது

நம்மளோட Colleagues, நம்மளோட Friends யாருக்காவது , எதாவது Political அல்லது ஒரு கருத்துக்கள் இருந்திச்சின்னா அத மதிங்க..

உங்களுக்கு 6-னு தெரியறது அவங்களுக்கு 9-னு தெரியும்.ரெண்டும் வேற வேற. இதெல்லாம் புரிஞ்சிக்கிடறதுதான் ஒரு நல்ல தன்மை.
So, special-ஆ வந்து நல்ல Friendly-யா இருங்க, அவங்க கருத்துக்கு மதிப்பு குடுங்க அந்த மாதிரி இருங்க…

11. யாராவது , எதாவது பேசும்போது இடைல Interrupt பண்ணாதீங்க.

  • ஒரு ஆளு எதாவது பேசும்போது ஊடைல , பெரிய பெரிய Leader-கிட்ட இந்த விஷயத்த பாத்திருக்கன் நான்.
    -பேசவே விடறது கெடையாது ,

ஏய்!! நான் இப்படி, இதை செய் மொதல்ல, நான் சொல்றத செய்யனும் அந்த கதைக்கே ஆவாது.

12. தனியா பேசுங்க

எப்போ,

எதாவது advice பண்ணனும், எதாவது Correction பண்ணனும், எதும் தப்பு நடந்து போச்சின்னா தனியா பேசுங்க.

13. மக்கள் கூட இருக்கும்போது பாராட்டுங்க, Basic-ஆ தெரியும்.
இத நான் Detail-லா சொல்லணும்னு தேவையில்ல

14) அதே மாதிரி எப்போமே Thank You சொல்லுங்க,

சின்னச்சின்ன வேல செஞ்சா அதுக்கு Thank You சொல்லுங்.

ஒருத்தர் தண்ணி கொண்டு குடுத்தா Thank You சொல்லுங்க, கதவ தெறந்து குடுத்தா Thank You சொல்லுங்க, எல்லாத்துக்கும் ஒரு Thank You சொல்லுங்க,

வெளிய உள்ள ஆட்களுக்கு மட்டுமில்ல வீட்ல, Wife-க்கு, மகளுக்கு, அப்பாக்கு, அம்மாக்கு, எல்லாத்துக்கும் ஒரு Thank You சொல்லுங்க,
வீட்ல உள்ளவங்கதான அப்படின்னு சொல்லிட்டு , குடிச்சிட்டு தூக்கி கெடாச்சிடறது

நான் ஆத்தூர்ல எங்கயோ இருக்கும்போது நான் ஷூ polish பண்ணிட்டுருந்தன், என் Bag-ல எல்லாத்தையும் Pack பண்ணி கொண்டு போவன், எதுமே தேடமாட்டன், ஊருக்கு போகும்போது எல்லாம் எடுத்துட்டு போவன்

ஒருத்தன் அங்க உக்காந்துட்டு , எனக்கு கொஞ்சம் தாயேன் அப்படின்னு சொன்னான், சரி இந்தா அப்படின்னு ஷூ Polish, அந்த Brush-அ கொண்டு போனான், அவன் அங்க ஷூ Polish பண்ணிட்டு , ஏ.. லே அப்படின்னுட்டு அங்க இருந்து வீசுதான் என் மூஞ்சில, நான் டபக்குனு புடிச்சிட்டு, என்னடா இவன் அப்படின்னு நெனச்சன்

இந்த மாதிரி இருக்கிற பசங்க வந்து நீங்க அடுத்தவங்க மதிப்ப கொறச்சலா நடந்துகிட்டிங்கண்ணா, நீ அடுத்தவனுக்கு மதிப்பு குறைவா நாடக்கள், உன் மதிப்ப காட்டுத, நீ எப்பேர்ப்பட்ட குடும்பத்துல இருந்து வந்திருக்க, நீ என்ன மாதிரி பழக்கம் உள்ளவன், அத காட்டுத நீ

So, அந்த மாதிரி ஒரு ஆளா நீங்க இருக்காதிங்க , இதெல்லாம் நம்ம தெரிஞ்சோ , தெரியாமலோ நாம, அவனுக்கென்னடா மதிப்பு அப்படிம்பான்..

உனக்கு அறிவு கெடையாது, நீ அப்படியாப்பட்ட குடும்பத்துல பொறந்தவன், அப்படியாப்பட்ட பழக்க வழக்கமில்லாதவன், நீ அறிவில்லாதவன் அப்படின்னு அர்த்தம்.

நீ அடுத்தவனுக்கு மதிப்பு குடுப்பியா, மதிப்பு குடுக்கலியா அது ஒன்னும் ஆகப்போறது கெடையாது, அந்த விஷயத்த ரொம்ப கவனமா பாருங்க, அதுலே எதும் பிரச்சன வராம பாருங்க okay.

15. யார்கிட்டயாவது, எங்கயாவது பேசும்போது Health-அ பத்தி யாராவது பேசனாங்கன்னா,

நாளைக்கி டாக்டர்கிட்ட போகணும் அப்படின்னு, ” என்னாச்சி என்ன Problem” அப்படின்னு சொல்லியெல்லாம் கேக்க கூடாது

என்னடா இவரு இப்படி சொல்றாரு, சுகமில்லாத ஒருத்தர் பத்தி கேக்க கூடாதா?

கேளுங்க ஒருத்தர் சுகமில்லன்னா “அப்படியா எல்லாம் ஒகேதான” , கரெக்ட் தானே அப்படின்னு கேளுங்க..

என்ன பிரச்சன அப்படின்னா அவருக்கு மூலமா இருக்கும், எனக்கு மூல வியாதி இருக்கிற எடத்துல கட்டி இதெல்லாம் கட்டி இதெல்லாம் உங்ககிட்ட சொல்லுவாரா அவரு..

சும்மா ஏன் போட்டு ஒருத்தர பிரச்சன உண்டு பண்றீங்க , Decent-ஆ கேளுங்க, சுகமில்லையா, என்னாச்சி ஒகேதான , ஒடம்புக்கு நல்லா இருக்கில்ல அப்படின்னு , “ஹாம் நல்லா இருக்கு” அப்படின்னு சொன்னானா?? எனக்கு சொல்ல இஷ்டம் இல்லடா, நீ நல்ல வேல Decent-ஆ கேட்டன்னு அர்த்தம்

அவரு உடம்புக்கு நல்லா இருக்கா, என்ன செய்யுது உடம்புல என்ன பிரச்சன, கட்டி இங்க இருக்கு அங்க இருக்கு, இந்த பிரச்சன அந்த பிரச்சனனு சொல்லனுமா உனக்கு..

அவர பத்தி அக்கறையா கேட்டிங்கன்னா, உடம்புக்கு நல்லா இருக்கில்ல, Hope உடம்பு நல்லா இருக்குனு நெனைக்கிறேன். அந்த மாதிரி , Decent-ஆ மேல கூடி பேசுங்க..

பேசறது அப்படி பேசுங்க, அவரு சொல்லனும்னா சொல்லட்டும், சொல்ல வேண்டாம்னா இருக்கட்டும் , ஒகே அப்படி பண்ணுங்க

  1. நம்ம யார்கிட்டயாவது போன் பேசிட்டு இருக்கும்போது, Call waiting வந்துச்சின்னா.. அவருகிட்ட சொல்லிட்டு ஒரு நிமிஷம் இருங்க, நான் வேற ஒரு Call வருது எடுக்கட்டா.. கேக்கலாம் , இது நம்ம பண்ணுவோம்

இன்னொரு விஷயம் நாம பண்ண மாட்டோம்..

என்னன்னா, நம்ம ஒரு 3 Friends பேசிட்டு இருக்கோம் அப்படின்னா , நமக்கு ஒரு Call வருதுன்னா, உடனே போன் எடுத்துட்டு அங்க மார்க்கமா போயிரது, இத மாதிரி அநாகரிகம் வேற எதும் கெடயாது.

போன் வருது அப்படின்னா இருக்கறவங்ககிட்ட கேக்கனும், எனக்கு ஒரு போன் வருது நான் பேசிகிட்டமா?
அப்படின்னு இருக்கறவங்ககிட்டகேக்கனும். அத யாரா இருக்கட்டும், பொண்டாட்டியா இருக்கட்டும், புள்ளையா இருக்கட்டும், Family-யா இருக்கட்டும், Friends-ஆ இருக்கட்டும், Lover-ஆ இருக்கட்டும், Colleagues-ஆ இருக்கட்டும், உங்களோட ஜூனியரா இருக்கட்டும்.

எல்லார்கிட்டையுமே இந்த மாதிரி யாராவது கேக்கறாங்களான்னு பாருங்க, எவனாவது கேக்காம எடுத்தான்னா அவன் நாறன பையன்னு அர்த்தம், அவனுக்கு அந்த மாதிரி Manners இல்லனு அர்த்தம், அல்லது அந்த Awareness-ஏ கெடையாது இப்படி ஒன்னு இருக்குன்னு..

அதே மாதிரி நீங்க பேசிட்டு இருக்கும்போது , அவன் வந்து Phone-அ நோண்டுனான், Phone-அ பாக்கறான், மதிப்பில்லாத விஷயம், உங்களுக்கு மரியாத குடுக்காத விஷயம்னு அர்த்தம்.

இந்த விஷயத்துல இருந்து வெளிய வாங்க

யாரவது உங்ககிட்ட பேசும்போது, Phone-அ Open பண்ணாதீங்க

  1. அதே மாதிரி உங்க வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துச்சின்னா டக்குனு ஓபன் பண்ணிராதீங்க, பார்சல் வந்து யாருக்கு வந்திருக்கோ அவங்க ஓபன் பண்ணட்டும்.
  • மகனா / மகளா/ அப்பாவா / தங்கச்சியா இருந்தாலும் சரி, எல்லாரையும் நான் சொல்றன்.
  • எங்க வீட்ல நான் ஸ்கூல் படிக்கும்போது ஏதாவது கொரியர் வந்துச்சின்னா, ஒருத்தருக்கு வந்தா ஒருத்தர் ஓபன் பண்ண மாட்டோம்.
  • ஒருத்தருக்கு லெட்டர் வந்துச்சின்னா இன்னொருத்தர் ஓபன் பண்ண மாட்டோம். அவ்வளவு Decent-ஆ இருங்க . எல்லாரோட Privacy-க்கும் Important குடுங்க.

19) இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம், எல்லாரும் நான் இதை நெறய தடவ பேசிருக்கன். சீனியரா இருந்தாலும் சரி , வீடு தொடைக்கிறவங்களா இருந்தாலும் சரி, CEO-வா இருந்தாலும் சரி. CEO-க்கு என்ன மதிப்பு குடுப்பீங்களோ அதே மதிப்பு வீடு தொடைக்கிறவங்களுக்கும் குடுங்க..

  • இப்போ எங்க ஊர்ல சொல்லுவான் அவன்லாம் சின்ன ஜாதி பய அவனையெல்லாம் நீ நான்னு தான் பேசணும் அப்படிம்பான். லூசுப்பயலே நீ, நான்னு பேசி நீ அவன் மதிப்ப கொறைக்கல, உன் மதிப்பை கொறச்சிகிடுத..

So , எவனும் பெரியவனும் கெடையாது, எவனும் சின்னவனும் கெடயாது. பெரிய ஆட்களுக்கு மதிப்பு குடுங்க, எல்லார்கிட்டயும் பாசமா இருங்க..

Society-ய Clean பண்றவங்க இருப்பாங்க இல்ல , நான் அவங்க கிட்ட சொன்னன், என் வீட்ட தொடைக்க முடியுமா?

hmmm… பண்ணிரலாம் அப்படின்னாங்க. சரின்னன். நாளைல இருந்து 1st டைம் னு சொல்லி, 1st டைம் உள்ள வந்தாங்க
வந்த உடனே , டீ குடிப்பீங்களானு கேட்டன், ம்.. மேலையும் , கீழையும் பாத்துட்டு என்னடா இது, தெரு Clean பண்றவங்கள வந்து டீ குடிப்பீங்களானு..

வாங்க உக்காருங்க Sofa-ல, இதே Sofa-ல அவங்கள உக்கார வச்சி, அவங்களுக்கு காபி போட்டு குடுத்தன், பிஸ்கட் குடுத்தன் சாப்பிடுங்க அப்படின்னு, சொன்னாங்க என் Husband இருக்கு, ம்.. அவரையும் கூப்பிடுங்க அப்படின்னு, அவரையும் கூப்பிட்டு, அவருக்கும் டீ/ காபி குடுத்து, எல்லாரும் ரொம்ப Friend ஆயிட்டாங்க ..

அந்த வேல செய்யட்டுமா , இந்த வேல செய்யட்டுமா, இல்லமா எவ்வளவு செய்யனுமோ அவ்வளவு செய்ங்க அப்படின்னு சொன்னன்

ஒருத்தருமே கூப்பிட மாட்டாங்க, ஒருத்தருமே டீ குடுக்க மாட்டாங்க, நீங்க என்ன எங்கள கூப்பிட்டு வீட்ல டீ-யெல்லாம் குடுக்கிறிங்க அப்படின்னு, இதுல என்ன இருக்கு, நீங்க நம்ம Friend, என் வீட்ல தெனமும் வேல செய்ய போறீங்க , இது கூட நான் பண்ணலன்னா என்ன இருக்கு அப்படின்னு சொல்லிட்டு, அதுக்கப்புறம் அந்த டீ Glass-லாம் அவங்களே கழுவி வச்சிட்டு அப்படி போனாங்க

எனக்கு CEO-ம் ஒண்ணுதான், ரோட்ல குப்பை தூக்குறவங்களும் ஒண்ணுதான், ரெண்டு பேருமே ஒண்ணுதான்.

எப்பமும் இந்த பழக்கத்த பழகுங்க , உங்களுக்கு நெறய மதிப்பும் , மரியாதையும் இருக்கும். இத எப்பவும் மாத்திராதிங்க.

  1. எங்கேயுமே, யாருமே Advice குடுக்காம, Advice-க்கு போகாதீங்க.

அட்வைஸ் கேட்டா மட்டும் அட்வைஸ் குடுங்க..

சுகமில்லையா?

நீ இஞ்சி அரைச்சி குடி , மஞ்சள்ல பால போடு , நீ அதுல பட்டைய போடு, நீ இத போடு அப்படினு உடனே அட்வைஸ்.

நான் ஒரு Hospital-க்கு ஒரு தடவ போயிருந்தன், ஒருத்தங்க வந்து admit ஆயிருக்காங்க, இன்னொருத்தங்க வந்து , நீ அத செஞ்சிரு , இத செஞ்சிரு, சாப்பிடு , வெண்ணிய குடி, அத குடின்னு. அங்க அந்த Dr இப்படி பாத்திட்டு இருந்தாரு, Nurse கண்ண காட்னாரு , நீ மொதல்ல வெளிய போ அப்படினு பிடிச்சி வெரட்டி விட்டாங்க.

Hospital admit ஆகி டாக்டர் வந்து Treatment குடுத்திட்டுருக்காரு, ICU-ல இருக்காங்க, இவங்க வந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க..

உங்க Advice-அ வீட்ல வச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியது தான இங்க வந்துட்டு, டாக்டர் இருக்காரு, Nurse இருக்காங்க, இவ்வளவு பெரிய Hospital இருக்கு , இங்க வந்து Advice பண்ணிட்டு இருக்காங்க .

கேக்காம லூசுத்தனம் மாதிரி , அரவேக்காடு மாதிரி Advice குடுக்காதிங்க, எங்க Advice தேவைப்படுதோ அங்க மட்டும் குடுங்க ஒகே

  • உலகத்துலயே easy-யா கிடைக்கிறது என்னது , அட்வைஸ்

21) எப்போமே உங்க Business-ல இருங்க, உங்க Business-அ விட்டு வேற Business போவாதிங்க. ஏன்னா அந்த Business வந்து எப்பமும் இது பண்ண முடியாது.

யாருகிட்டயும் போயி Age-அ கேக்காதீங்க , சம்பளத்த கேக்காதீங்க..

இதுல எதுலம் follow பண்ண போறிங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top