நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஆள் பிடிக்கிற வேலைன்னு சொல்றாங்க. இவங்கட்ட எப்படி சொல்லலாம்.
ஒரு உரையாடலா இத பார்க்கலாம்.
Mentor – Mentee conversation
Mentor – மக்கள் வந்து சொல்றாங்க இல்லையா மீட் பண்ணி இருக்கோம். ஆனா அவரு கேன்சல் பண்ணிட்டு போயிட்டாரு அவரு இல்லை, வரல அப்ப நீங்க கேட்டீங்களா? என்ன ரீசன் நம்ம மொதல்ல இருந்தே பேசி இருக்கோம் மக்கள்கிட்ட பேசும்போது இதை மட்டுமே பேசுங்க இப்படியே பேசுங்க.
Mentee – இது வந்து ஒரு வலுவான பாயிண்ட்..
Mentor – சரியா? அந்த மாதிரி ஆனா.
Mentee – பணத்தேவ நிறைய இருக்கு, கடன் இருக்கு ,பிசினஸ் பண்றதுக்கு தயார் இல்லை. அதெல்லாம் ஆள் பிடிக்கிற வேலை மாப்ள நீ அது வேலைக்காகாது. என்னால முடியாதுன்னு சொல்றாரு.
இப்ப நான் பண்ணிட்டு இருக்க கூடிய தொழில எப்படி அவருக்கு ப்ரொமோட் பண்றது?
Mentor – மக்கள் வந்து சொல்வாங்க இல்லையா மீட் பண்ணி இருக்கோம் ஆனாலும் கேன்சல் பண்ணிட்டு போயிட்டாரு அவரு இல்ல, வரல.
அப்ப நீங்க கேட்டீங்களா? என்ன ரீசன் அவரு ஏன் மீட் பண்ண போறீங்கன்னு.. why அவருக்கு தெரியுமான்னு?
Mentee – கேட்ருக்கிறன் சார். அவரு பிஸ்னஸ் பண்றதுக்குதான் வந்திருக்காரு. why என்கிறதுக்கு ரீசன் சொல்லியிருக்கரோம். ஆனா இதைவிட அந்த வேலை முக்கியம்னு சொல்லி அவரு கேன்சல் பண்ணிருக்கலாம்.
Mentor – இல்ல, நான் சொல்றது வந்து சில இடத்துல ஜெனியூனா இருப்போம். நம்ம ஒன்னும் பண்ணமுடியாது. அந்தது சொல்ல வரல.
but ஜென்ரலா வந்து நிறைய மீட்டிங்க கேன்சல்பண்றராங்க, அப்படீனா.. அது வந்து ரொம்ப ஜென்ரலா மீட்டிங் கேன்சல் பண்றாங்கன்ன இல்ல.. நா எதுக்கு கேட்கிறேன்னா என்ன modeல சொல்லலாம்.
யாரெல்லாம் உங்க டீம்ல வந்து இந்த மாதிரி போனவங்க, கேன்சல் ஆயிடுச்சின்னா.. அவரோட why என்னன்னு உங்களுக்கு தெரியுமா?
யாருக்கு ஒருத்தரோட why அப்படின்னு தெரியணும் அது தெரிஞ்சா அவங்க மீட்டிங் கேன்சல் பண்ண மாட்டாங்க.
அப்படி மீட்டிங் கேன்சல் ஆனாலும் சரி, திரும்ப போன் பண்ணி கூப்பிடுவாங்க….
நா கொஞ்சம் அங்க போயிட்டேன் நீங்க நாளைக்கு வர முடியுமா?
இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு பண்ண முடியுமா? அப்படின்னு கேட்பாங்க..
அப்படி சொன்னாங்கன்னா, அவங்களோட why அவங்களுக்கு தெரிஞ்சதுன்னு அர்த்தம்.
நம்லா ஜெனரலா போய் இந்த ப்ராடக்ட் நல்ல ரிசல்ட் இருக்கும், இதுல நல்ல பணம் சம்பாதிக்கலாம், நல்ல நெட்வொர்க்ல இருக்கலாம், நல்ல ரெஸ்பெக்ட் இருக்கும். நம்ம why கிடையாது. அது வந்து அன்பரசு why அது அவங்க why கிடையாது.
Mentee – ஆம் ஓகே ஓகே புரிஞ்சது.
Mentor – சொல்றது எல்லாம் உண்ம…. இது எல்லாம் நடக்கும்.
நம்ப கம்பெனில ஜாயின் பண்ணா இதெல்லாம் நடக்கும். ஆனா இது உங்களோட why .அவங்க why கிடையாது.
Mentee – ok, அவங்க why என்னன்னு நமக்கு தெரியணும்.
Mentor – அது எப்பன்னா நா followup-ன்னு ஒரு மேட்டரே இருக்கக் கூடாதுன்னு யான் சொல்ரேன் தெரியுமா?
நீங்க அவங்க கூட நார்மலா கம்யூனிகேஷன் ல இருக்கனும்.
நம்ம வீட்ல பேசிட்டு இருப்போம், குழந்தை கூட பேசுவோம், அம்மா கூட பேசுவோம்,நம்ம மாமியார் கூட பேசுவோம் நாம எல்லார் கூட பேசிட்டு இருப்போம்.
அது மாதிரி தான் அவங்ககூட பேசிட்டு இருக்கணும். என்ன போயிட்டு இருக்கு? எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இப்ப நம்ம பேசுறோம் எதுக்குன்னு தெரியாம நாம பேசுறோம்.
Mentee – Yes,இந்த கான்வர்சேஷன் மாதிரியே இருக்கு.
Mentor – இதுல நா இதுக்கு நா follow up ன்னு
முத்தரகுத்த முடியுமா? முடியாது.
ஏன்னா இத அன்பரசு பண்ணிட்டு இருக்காங்க. அன்பரசு லைப் எப்படி இருக்கு. அன்பரசு எங்க struck ஆயிட்டாங்க., என்ன ஜெயிச்சுட்டு இருக்காங்க.. எது நல்ல விஷயம் எனக்கு புல்லரிக்கும்.
எனக்கு ஆச. எனக்கு அன்பரசு லைப் எப்படி போயிட்டு இருக்கு… எனக்கு உள்ளருந்து ஒரு தவிப்பு…
எனக்கு பிசினஸ் கிடையாது… நான் உங்ககிட்ட இன்னும் எவ்ளோ பணம் வேங்கணும்… இன்னும் என்ன ட்ரெய்னிங்ல்லாம் கொடுக்கணும்.
அந்த நினைப்பு கிடையாது என் மனசுல ஆழம் வரைக்கும் அது கிடையாது.
Mentee – கிடையாது, ok.
Mentor – இதுவரைக்கும் அன்பரசு பேசியிருக்காங்க, ஜாயின் பண்ணி இருக்காங்க, படிச்சிருக்காங்க இவுங்க life எங்க போயிகிட்டு இருக்கு? இவங்களுக்கு இன்னும் என்ன பிரச்சனை இருக்கு? இவங்க எங்க ஸ்டக்
ஆயிருக்காங்க.. என்ன நல்ல விஷயங்கள் நடக்கு இன்னும் என்னவெல்லாம் சப்போர்ட் பண்ணனும்.
இதுதான் என் மனசுல இருக்கு.
Mentee – ம்… ம்.. ம்.. அந்த அது மாதிரி நம்ம மாறனும்.
Mentor – நம்ம மொதல்ல இருந்தே பேசிருக்கோம், மக்கள்ட்ட பேசும்போது இத மட்டுதான் பேசுங்க இப்படியே பேசுங்க.
Mentee – சரி சரி.
Mentor – எப்டி இருக்கீங்க மா.. உங்க Goa பிசினஸ் எப்டி போயிட்டு இருக்கு? எப்டி இப்ப சரக்கு எல்லாம் எப்டி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? புதுப்புது ஐட்டம் எல்லாம் போகுதா?
வேறு எங்காவது branch எல்லாம் போட்டு பண்ற மாதிரி பிளான் இருக்கா? சும்மா ரொம்ப நாளாச்சி.
Mentee – இது எங்கிட்ட இருக்கக்கூடிய மைனஸ் பாயிண்ட். நாம பார்த்ததும் பிசினஸ் பேசுறோம்.
மெண்டோர்: இது மைனஸ் இல்ல..இது improvement பாயிண்ட்…
Mentee: நா வந்து பேசுறப்ப நீங்க சொல்ற மாதிரி சில சமயம் பிசினஸ்ச மைண்ட்ல வச்சுட்டு இருப்போம். அது இல்லாம பிரண்ட்லியா இருக்கணும்.
Mentor – பிசினஸ வந்து மைண்ட்ல வைக்கவே வெக்காதீங்க…
எனக்கு அதை நினைச்சாலே, எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கும்.
பிசினஸுக்காக ஒருத்தர்கிட்ட பேசரது அதாவது சுத்த செல்பிஷ்.
Mentee- ம் ம் ம்…
Mentor- ஒருத்தன் நமக்கு செட் ஆக மாட்டான், எரிச்சல் பண்ணிக்கிட்டு இருக்கான் ,இரிடேட் பண்ணிக்கிட்டு இருக்கான் அவன வுட்டுரனும்
ஆனா தங்கமான மக்கள் சுத்தி சுத்தி இருப்பாங்க..
அவங்க நமக்கு பிசினஸ் கொடுத்தாலும், சரி கொடுகாட்டினாலும்…சரி.
ஏன் எங்களோட நாலு கணக்குல வந்து நாங்க எவ்லோ சம்பாதிக்க போறோம் .
எங்க டார்கெட் என்ன!! அது இருக்காது…
மெயினா எத்தனை பேர சம்பாதிக்க வைக்க போறோம்… எத்தனை பேரு வாழ்க்கையை சாதிக்க வைக்க போறோம். எவ்ளோ பேரு நம்மள்ட்ட நல்லதா வர போறாங்க…
என்க கவனம் எல்லாம் அதை நோக்கி தான் இருக்கும்.
அவங்க லைஃப் நம்ம எப்படி டெவலப் பண்ண போறோம். அவங்களுக்கு என்னவெல்லாம் ஹெல்ப் பண்ண முடியும் இதுதான் என் கவனம் ஃபுல்லா இருக்கும். மனசார நீங்க எங்கேயாவது தேடிப் பிடித்து பார்த்தாலும் சரி அதுதான் வெளியில வரும்.
Mentee – சுத்தி சுத்தி வரப்ப அதுல இருந்து தான் வரும்.
Mentor – அந்த எண்ணம் வரும்போது அது அவங்களுக்கு தெரிய வந்துரும்.
அவங்களுக்கு சென்ஸ் பண்ண முடியும்.
இந்த ஆளு வந்து பணத்துக்காக நம்மள சுத்தி வரல, பிசினஸ்க்காக சுத்தி வரல, நம்ம நல்லா இருக்கணும்னு நெனைக்கிரான் இந்த ஆளு. அப்படின்னு அவங்களுக்கு பீல் பண்ண வரும்.
நம்மள சுத்திருக்கிறவரும், மத்தவங்களும் இப்படித்தான் பார்க்கணுமே தவிர… அந்த ஏதோ, ஒரு படத்துல கார்த்திக் படத்துல அவன் கல்யாண வீட்டுக்கு போவான்… பார்த்தா, அங்க கொள்ள அடிக்கிறதுக்கு பாப்பான் ஒரு செயிநு ரூபாய் 25 ஆயிரம், அடுத்து 50 ஆயிரம், அந்த கழுத்துல taging இருக்கும்.
அந்த மாதிரி நம்ம அவங்கள பார்த்த எப்படி இருக்கும் சொல்லுங்க? அந்த கொள்ள கூட்டத்திக்கு நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?
Mentee – அது நா எப்டி பாக்குறேன்னா நீங்க சொல்றது 100% உண்ம. அது எனக்கு புரிஞ்சது. சார், அது வந்து நம்மளுடைய அல்டிமேட் நோக்கமே, வந்து நம்ம பிசினஸ் பண்ணனும்..அப்படிங்கறது அந்த ஒரு தாட் என்னோட ஆழ் மனசுல சில சமயம் இருக்கு.
சில சமயம்ல்ல பல சமயம் இருந்தது.
அத தாண்டிட்டோம்னா.. நீங்க சொல்றது வந்து கரெக்ட்…
அவங்களுக்கு உணர்வுபூர்வமா கூடிய ஹெல்ப்பாதான் இருக்கணும். அ
வங்க பேசறது வந்து அன்பரசு வந்தார்னா, ஏதாவது ஒரு ஜாலியான ஒரு விஷயத்த பேசுவாரு ,பிசினஸக்காக பேச மாட்டாரு ,கேட்டா சொல்லிக் கொடுப்பாரு என்ற உணர்வு அவங்க மனசுக்குள்ள வரணும்.
அதான் சார் நீங்க சொல்ல வர்ரது?
Mentor – ம் 100க்கு 100 அதான் நடக்கணும். அவர்ட்ட பேசனா சந்தோசமா, ஜாலியா இருக்கும்.நிறைய விஷயங்கள் பேசுவாங்க.
நா திரும்ப ஒருக்கா ரிமைண்ட் பண்றேன்.
லவ், காதல் வர்றதும்… சேல்ஸ் பண்றதும் ரெண்டும் ஒன்னு.
எப்ப ஒருத்தர்மேல நம்ம புடிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சாங்கன்னு தெரியக்கூடாது. கூட பேசிக்கிட்டே இருப்போம் . கொஞ்ச நாள் கழிச்சி love ஆயிருக்கும்.நமக்கு தெரியவே தெரியாது. கொஞ்ச நாள் கழிச்சி என்னடா இவங்க வுட்டுட்டு நம்மளால இருக்கவே முடியலையேன்னு நமக்கு தோணும்.
Mentee – ம் காதலன் காதலி அப்படித்தான் தோணுவாங்க.
Mentor – நம்ம ஒருத்தர் நண்பர்களா இருந்து பழகிபோயி பழகி பழகி…. அந்த காதலா மாறினது…
எந்த டேட்ல மாறிச்சி என்னைக்கு மாறுச்சின்னு சொல்ல முடியாது அவங்களுக்கு.
Mentee- இது வந்து ஒரு வலுவான பாயிண்ட்.
Mentor – சரியா? அந்த மாறி ஆனா.
அதே மாதிரி தான் சேல்ஸ். நீங்க அன்பரசு போறீங்க… அன்பரசு நல்லா பேசுவாரு, அன்பரசு அப்டி அப்டி எல்லாம் பேசும்போது அவங்களே அறியாம நம்ம அன்பரசு கூட சேர்ந்து பிசினஸ் பண்ணனும், அன்பரசு கூட இருக்கணும், இவரு நிறைய விஷயங்கள் சொல்வாரு, இவரு நல்லாதான் பண்ணுவாரு அப்படின்னு அவங்களுக்கு தோணி என்ன நடந்தது எப்படி ஜாயின் பண்ணாங்க தெரியாது நடந்திருக்கும் அப்புறம்தான் அவங்க நம்ம கூட ஜாயின் ஆகுறதுக்கு ரெடி ஆயிட்டாங்க நம்ம டவுன்லைன் ஆதரத்துக்கு ரெடி ஆயிட்டாங்க எப்ப ஆனாங்க அப்படின்னு அவங்ககளுக்கே தெரியாது .எப்படி உங்கள புடிச்சதுன்னு அவங்களுக்கு தெரியாது. எப்ப உங்க பிசினஸுக்கு ஜாயின் பண்ணாங்கன்னு தெரியாது. முடிவு எடுத்துடுவாங்க இத வந்து நான் (சேல்ஸ் ,லவ் )ஒன்னு அப்படின்னு தான் பார்க்கிறேன்.
Mentee – oh! சரி சரி correct ,ஆமாம் நல்லா வந்து நம்ம இன்னும் ஒரு படி இம்ப்ரூவ்ஆயி அவங்கள பாக்குறப்போ பிசினஸ்மேனா பார்க்காம ஒரு நல்ல நண்பனா பார்த்தோம்னா அந்த நண்பன் நீ என்னடா பண்ற சொல்லி கொடுன்னு சொல்லி கேட்க அவங்க வாயால கேட்க வைக்கணும். அது இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகும்.
Mentor – அதாங்க அது. இது சில இடத்துல நம்ம ஜென்ரல் பப்ளிக்ல மாதிரில்லாம் பண்ண முடியாது.but இதான் நம்மளோட வாழ்க்கை முறையா இருக்கணும் நெட்வொர்க்கிங் வந்து நம்மளோட வாழ்க்கை முறை இல்லையா? நம்ம ஸ்டைல். நம்ம வே ஆஃப் லிவிங்.
Mentee – நீங்க சொல்றது சார், என்னோட க்ளோஸ் பிரண்ட்ன்னு வைங்க sir, ஒருத்தரு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அவரு வந்து பிசினஸ் பண்ணமாட்டாரு அல்லது பணத் தேவை நிறைய இருக்கு, நிறைய கடன் இருக்கு பிசினஸ் பண்றதுக்கு தயார் இல்ல அந்த மாதிரி இருக்கக்கூடிய நபர் கிட்ட நா வந்து நெட்வொர்க் மார்க்கெட்டிங் அதெல்லாம் ஆள் புடிக்கிற வேலை மாப்ள நீ அது வேலைக்காகாது என்னால முடியாதுன்னு சொல்றாரு. இப்ப அந்த நபர் கிட்ட நான் நல்லா இருக்கேன் அப்படின்னு ப்ரோமோட் பண்ணனுமா? அல்லது நம்ம அவனுடைய கஷ்டத்த மனதார கேக்கணுமா?
Mentor – ok, ஒன்னுவந்து அவரோட கஷ்டத்த மனசார கேக்கணும்.
Mentee – சரி, sir.
Mentor – அதுக்கப்புறம் அவரு அந்த கஷ்டத்துல இருந்து வெளிவர்றதுக்கு என்னவெல்லாம் பாடுபட்டிருக்காரு , என்னெல்லாம் முயற்சி பண்றாரு, எப்படில்லாம் நாம இம்ப்ரூவ் பண்ணனும் அப்படின்னு அதுதான் நம்ம திரும்ப இம்ப்ரூ பண்ணனுமே தவிர இப்ப அவரு வந்து பெட்டிக்கட வச்சு பொழைக்கணும் அப்படின்னா ok very good பெட்டிக்கட வைக்கலாம் எப்டி வைக்கலாம் என்னென்ன சரக்கு வாங்க போறீங்க எப்படி வேலை செய்யப் போற அந்த helpப தான் பண்ணனுமே தவிர அத வுட்டுட்டு நீங்க நெட்வொர்க்கு வா வா நீ பண்ண முடியும்ன்னு அந்த வார்த்தை நம்ம வாயிலிருந்து வரக்கூடாது.
Mentee- ம்
அப்போ நம்ம எப்டி ப்ரொமோட் பண்றது இப்ப நெட்வொர்க் பண்ண வேண்டாம்னு நீங்க சொல்றீங்க.
நெட்வொர்க் பிசினஸ பத்தி பேச வேணாம்னு சொல்றீங்க. ஆனா அவருக்கு சப்போர்ட் பண்ண சொல்றீங்க. அப்போ நம்முடைய நா பண்ணிட்டு இருக்கக்கூடிய தொழிலை எப்டி அவருக்கு புரமோட் பண்றது?
Mentor – இல்ல, அங்கதான் உங்க தப்பு .அங்க தான் உங்க selfish வர்றமாதிரி ஆயிடுதில்ல. நீங்க அவருக்கு நல்லதுதான் செய்றீங்க but உங்க பிசினஸ் பண்னா அவர் நல்லா இருக்க முடியும்னு சொன்னா அங்கதான் அவருக்கு இடிக்கும். இது வந்து அவருக்கு நம்பிக்கை கிடையாது நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணி தான் வேலை செய்ய முடியும் அப்படின்னு நம்பிக்கை கிடையாது. ரெண்டாவது அந்த மாதிரி பிசினஸ் பண்ண முடியும்னு நம்பிக்கை கிடையாது. அந்த ஒரு காரணத்துல அவருக்கு என்னவெல்லாம் நோக்கம் போவுதோ எங்கெல்லாம் போநுமோ அததான் கூட்டிட்டு போணும். இப்ப ஒரு படத்துலகூட கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அந்த பொண்ணு யாரையோ லவ் பண்ணி இருக்கு அப்படின்னு அந்த மாப்பிள்ளைக்கு தெரிய வரும் உடனே அந்த கல்யாணம் முடிஞ்ச மாப்ள அந்த பொண்ண கூட்டிட்டு எவ்வளவு ஊர் ஊரா நாடு நாடா போயிட்டு அந்த காதலனை சேர்த்து வைக்கிறதுக்கு கூடவே கூட்டிட்டு போவான் அப்படி கூட்டிட்டு போற தருணத்துல அந்த ஹஸ்பண்ட் கூட லவ் வந்துரும் அவங்களுக்கு.
Mentee – ம் ம் அந்தப் பழைய காதலனை மறந்துட்டு ம் ம்..
Mentor – என் பழைய லவ்வர் கிட்ட கூட்டி போறதுக்கு என் புருஷன் இவ்ளோ கஷ்டப்படுறானே அப்படின்னு சொல்லிட்டு படம் endடுல வந்து அவன் வேணாம் எனக்கு நீயே போதும்னு சொல்லிட்டு வைஃப்,ஹஸ்பண்ட் கூட இருப்பாங்க. நம்மளுக்கு அந்த எண்ணம் கிடையாது. இவங்களுக்கு அந்த மாதிரி ஒரு பிசினஸ் பண்ணிதான் ஆகணும். அவங்களுக்கு அதை எப்படி கொண்டுவரணும் அந்தமாதிரி ஒரு நோக்கத்திலேயே அவங்க கூட போவணும் அப்பதான் அது டிராவலா முடியும். இல்லன்னா நம்மளோட selfish ஆயிடும். அவங்க வந்து நம்ம உறவு துண்டிக்கப்பட்டுடும் . ஏன்னா கருத்து வேறுபாடு, அவருக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் சம்பாதிக்கலாம்னு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு இதுலதான் சம்பாதிக்க முடியும்னு நம்பிக்கை. ரெண்டு பேருமே வேறவேற பாதையில போயிருகீங்க. நீங்க நண்பரே கிடையாது. ரெண்டு பேருமே அவங்க வந்து சுயநலவாதிஆயிடுவாங்க specialலா அவரு எப்படியோ இருந்துட்டு போகட்டும் .ஆனா நீங்க அந்த மாதிரி இருக்கிறது ரொம்ப தப்பு .நீங்க அவரு பாதையிலதான் போகணும். அவர் வந்து முதல்ல உங்களுக்கு ஒரு நண்பர்.
Mentee- ஓகே.
Mentor – ரெண்டாவது அவரு வாழ்க்கை நல்லா இருக்கணும். மூணாவது அவரு நினைச்சதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் நீங்க ஒரு நெட்வொர்க்கர் உங்க பிசினஸ் குடுக்க வைக்கரது அதுல்லாம் கடைசிலஉல்ல ஒரு விஷயம். அது அவருக்கு ஒரு சிந்தன வராத வரைக்கும் நீங்க அத பத்தி பேசவே கூடாது.
Mentee – oh! நெட்வொர்க்க பத்தியே பேசக்கூடாது?
Mentor – அவருக்கு என்ன ஹெல்ப் பண்ண போறீங்க ? அவருக்கு ஜாப் வேணும்னா ஜாப் வாங்கி கொடுங்க உங்களுக்கே தெரியும் ஜாப் வைத்து ஒன்றும் சம்பாதிக்க முடியாது.தொழில் வச்சி சம்பாதிக்க முடியாதுன்னு நீங்க நினைக்கலாம் but அவருக்கு சொல்லிடாதீங்க.